JUNE 10th - JULY 10th
பயணிகளின் கவனத்திற்கு...
"இப்போது சென்னைக்குச் செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் மூன்றாவது பிளாட்பாரத்தில்வந்து நிற்கும்.." என்று ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் வந்த அறிவிப்பைப் கேட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்து அம்மா துளசியின் கைகளைப் பிடித்து நடந்து கொண்டிருந்த ஜான்சி..
ஒவ்வொரு மனிதருக்கும் எத்தனை கனவுகள்!!! என்று எண்ணியபடியே ரயிலில் ஏறினாள்..
"அம்மா...இந்தா...இந்த லோயர் பெர்த்தில் நீ படுத்துக்கோ..". நான் என்னோட லோயர் பெர்த் இதோ வயசான அம்மாக்கு தந்துட்டேன்.
நான் சின்னவ.என்னால அப்பர் பெர்த் ஏறமுடியும் " என்று சொல்லியபடி அந்த முதியவருக்கு தன் படுக்கையை அளித்து விட்டு,
துளசியின் படுக்கைகளை ஒழுங்குப் படுத்தி விட்டு படுக்கச் சென்றாள் ஜான்சி.
மனது களைப்பாக இருக்கும் போது தூக்கம் வருமா என்ன?
'ரயில் பயணம். நேற்று கூட இந்த ரயிலில் பயணம் செய்வேன் என்று நினைக்கலை....எனக்கு ரயில் ரொம்ப பிடிக்கும்... பத்து வருஷத்துக்கு முன்னாடி ரயிலில்
சென்னையில் இருக்கும் தாத்தா பாட்டி ஆத்துக்கு போனது... அதோட தடக் தடக் ஓசையும் அதோட ஹார்ன் சத்தமும் என்னைப் புல்லரிக்கச் செய்யும்..
எத்தனை விதமான மனுஷா..
சிலபேர் அன்பானவா .சிலபேர் ஆபத்தானவா...சில பேர் கோபக்காரா.... ம்ம்..கோபம்ன்னா
ஆணவம்னா அந்த மனுஷன் நினைவுதான் வரது.... பத்து வருடங்களாக எத்தனை கஷ்டம்..?
அப்பவும் அந்த பொல்லாத மனுஷன் கூடவே வந்து எத்தனை அதிகாரங்கள்...அப்போ கூட நான் உன்னைப் பத்தி புரிஞ்சுக்கல மா..
நேற்று ஜான்சி ஆபிஸ் சென்று விட்டு வீட்டிற்கு வெளியே நின்ற போது....அவள் அப்பா ஈஸ்வரன் வீசிய சுடு சொற்களை தாங்க முடியாமல் வெளியே நின்றாள் ஜான்சி....
"எங்கேடி.. உன் பொண்ணு..? உன்னை மாதிரியே யார் கிடைப்பான்னு அலைஞ்சுட்டு ராத்திரி வந்தா ஊருல இருப்பவங்க தப்பா பேச மாட்டாங்க..?..நீங்கெல்லாம் பொண்ணுகளா?.. எத்தனை நேரமாச்சு?..யாரையாவது உருப்படாதவனை காதலிச்சு தொலைக்க போறா? இன்னிக்கு வரட்டும் அவ...பாக்கறவன் எல்லாம் உன் அழகை ரசிக்கிற மாதிரி உன் பொண்ணு அழகையும் ரசிக்கப் போறான்.
இவளும்.ஈ...ன்னு.இளிச்சுண்டு அவனோடு சுத்தப் போயிருப்பா.
ஊர் சுத்திக் கழுதை.."
என்று துளசியிடம் கத்திக் கொண்டு இருந்தார்.
பதில் பேச துளசிக்கு தைரியம் இல்லை..அப்படித் தப்பித் தவறி பேசினாலும் இன்னும் பல வார்த்தைகள் நெருப்பாக வந்து விழும்.
வீட்டினுள்ளே வந்த ஜான்சியைப் பார்த்து.
"நல்ல பேரு வச்சா உங்கம்மா .ஜான்சி..உனக்கு அந்த ஜான்சி ராணின்னு நினைப்போ? என்றான் ஈஸ்வரன்...
"உங்களுக்கும் சரியான பெயர்தான். நல்லவேளை நெற்றிக்கண் இல்லை.." என்று முணுமுணுத்துக் கொண்டே அறைக்குள் சென்ற ஜான்சியை இழுத்து.
"என்னடி, .. முணுமுணுப்பு?. உங்கம்மா தந்த தைரியமோ?
படிச்சுட்டு வேலைக்கு போற கர்வமோ?.இந்தப் பருப்பு என்கிட்ட வேகாது...என்றதும் பட்டாசு போல பட பட வென கத்தினாள் ஜான்சி..
"இதோ பாருங்க. இந்த மாதிரி எத்தனயோ தடவை கத்தி இருக்கீங்க.?பொறுத்துண்டேன்.
அப்பா என்ற மூணு வார்த்தைக்காக பொறுமை என்ற மூன்று எழுத்துல இருந்தேன்..
ஆமாம்.... எங்கம்மா கொடுத்த தைரியம் தான்... அவங்கதான் துளசிங்கற பேருக்கு ஏத்தமாதிரி
பொறுமை சாலி...ஆனா நான்...
ஜான்சி ராணி..... அடிக்கடி எங்க போனேன்னு கேட்கறேளே..?
ஜான்சி ராணி மாதிரி கராத்தே குத்துச்சண்டை இதெல்லாம் கத்துக்க போனேன். எதுக்கு தெரியுமா?உங்கள மாதிரி இருக்கறவாளை சமாளிச்சு புத்தி புகட்டத்தான்... வீரம் தைரியம் இதெல்லாம் எங்கம்மா மனசுக்குள் புதைந்து போனவை..
ஆனா நான்...... ஜான்சி...ராணி..."
என்று எதிர்த்து நின்றதும் அடிக்க வந்த ஈஸ்வரனின் கையைப் பிடித்து .".ம்ம்...ஜாக்கிரதை..! என்றபடியே அறைக்குள் சென்று கதவை மூடினாள் ஜான்சி...
கதிரவன் தன் ஒளிக்கதிர்களை வீசத் தொடங்கினான்... பறவைகளின் ஓலிகள் காதில் வந்து இசை பாடிய சத்தங்கள் கேட்டு திடீரென ஜான்சி கண்விழித்து கொட்டாவி விட்டுக் கொண்டே எழுந்து கதவைத் திறந்து துளசி துளசி மாடத்தின் பக்கத்தில் இருக்கும் கடிதத்தை எடுத்து பார்த்தாள்...
ஒரு அழகான பெண் பயந்த நிலையில் இருப்பது போன்ற ஒரு ஓவியம்.அதன் பக்கத்தில் ஒரு கடிதம்...
"ஜான்சி. .. ஏன் நான் உனக்கு இந்தக் கடிதம் எழுதி இருக்கேன்னு நினைக்கிறயா?
மனதை விட்டு மனதில் புதைந்து கிடக்கும் வார்த்தைகளைச் சொல்ல கடிதம் தான் தூது செல்ல ஒரு தோழி..."
"எனக்கு நான் போகின்ற பாதை சரியா..? என்று பலமுறை யோசித்துத்தான் இந்த முடிவிற்கு வந்தேன். நாம பிறக்கும் போதே நம் பாதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கடவுள் எழுதி விடுகிறார்...அதை சிலர் விதி என்றும் சிலர் மதி என்றும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றார்கள். வாழ்க்கைப் பாதையில் எல்லோருக்கும் முள்ளும் மலருமாக கலந்து இருக்கும்.ஆனா.....எனக்கு...
முட்பாதைதான்..
நீ அடிக்கடி கேட்பயே... அதுக்கு பதில் இன்னிக்கு சொல்றேன். ஏன் அவர் இந்த மாதிரி ஆணாதிக்கம் உள்ளவரா இருக்கார்னு...ஆணாதிக்கம் மட்டும் இல்ல.உலகத்துல எத்தனையோ நல்ல குணங்கள் உள்ளனர்?. அதேபோல உங்கப்பாவும் இருந்திருக்கலாம்..
உங்கப்பா சின்ன வயசுல இருந்தே யாரையோ ஒரு பெண்ணை காதலிச்சு இருக்காரு.
அவள் பெயர் கல்யாணி... அவள் காதல் வளர வளர ஆசைகளும் அவளுக்கு வளர்ந்திருக்கு... அதனால் நிறைய பணம் உள்ள ஒருவரைத் திருமணம் செய்து வெளிநாட்டுக்கு போயிட்டா. அதில் இருந்து அவருக்கு பெண்கள்னாலே வெறுப்பு...
எல்லாப் பெண்களுக்கும் பணம்தான் பிரதானம் என்று நினைத்தாரே அதுதான் தப்பு..... அவரோட ஏமாற்றம்தான் அவரை விந்தை மனிதராக உருவாக்கியது...
பலன்...நான் பலி ஆடு...
என்னோட விதிதான் நான் அவரை திருமணம் செஞ்சது....
இனிமேதான் எனக்கும் உனக்கும் வாழ்க்கை ஆரம்பம். நிறைய பேருக்கு சாதிக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்தாலும் குடும்ப சூழ்நிலையால தன் திறமைகள வெளிக்கொணர முடியாம தாழ்வு மனப்பான்மை பயம் இப்படியே வாழ்ந்தாச்சு.
கணவன் மனைவி இருவரும் கற்பு மாறாத அன்புடன் நேசிக்க வேண்டும். மனைவி மேல் சந்தேகம் அவள்மேல் பொறாமை இவை அனைத்தும் சேர்ந்து என் மீது அதிகாரம் செலுத்த தோன்றியது. கணவன் என்ற அதிகாரத்தில் என்னால "தன்னால் செயல்பட முடியவில்லை" என்று ஆதங்கம் இருந்தாலும் ஒரு கட்டுபாட்டில் இருந்தேன்..
அறியாமையால் ஆழ்ந்து இருந்த பெண்கள் அந்தக் கூட்டில் இருந்து வெளியே வருவதுதான் அவர்களுக்கு வடிகால்.
பெண்கள் என்றாலே பயமும் நாணமும் முக்கியம் என்று சொல்லியே பழகியாச்சு.என்னை உடலாலும் மனதாலும் சொற்களாலும் துன்புறுத்துவதில் வன்முறை.. எப்பவும் தலைக்கு மேலே கத்தி....சதா காலமும் பயம் பயம்....அதனால பகவானைச் சரணடைந்தேன்.. பக்தி மார்க்கம் கூட தவறா.?. உங்கப்பா அகராதியில் தவறு....
' எப்பவும் பூஜை ரூமிலேயே கெடக்கயே? கடவுளா உனக்கு படிஅளக்கப் போறார்? நான் போய் சம்பாதித்து வந்தால்தான் உனக்கும் உன் பொண்ணுக்கும் சோறு....". என்று என் கடவுள் நம்பிக்கைகளை தகர்க்கும் மாதிரி சொற்கள் எத்தனை!!!!..
நாவினால் சுட்ட வடு என்றும் மாறாது.அவை வடுக்களாக நாம வாழும் வரை இருக்கும்... அஞ்சாமை சீற்றம் இதெல்லாம் கல்வியுடன சேர்த்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு பெண் வாழ்க்கையில் எத்தனையோ தடைகள்.
என் கணவர் விந்தை மனிதர் மட்டும் அல்ல. தான் என்ற பெருமிதம் கர்வம் உள்ள மனிதர் .பெண்கள் எப்படி பந்தாடப்படுகிறார்கள்... நான் என் பெண்ணை பல கஷ்டங்களுக்கு நடுவே வளர்த்து இன்று பல கலைகளில் சிறந்து விளங்கும் படி செய்தது.. அவள் என்னைப்போல்
இல்லாமல் ஒரு ஜான்சி ராணியைப் போல் வளர வேண்டும் என்றுதான் அந்தப் பெயர் வைத்தேன்.. நல்ல வேளை
என் குழந்தைக்கு பெயர் வைக்கும் உரிமையாவது எனக்கு இருந்தது!!..
அதனால் எத்தனை நாளாக பல ஏச்சு பேச்சுக்களை பொறுத்துக் கொண்ட நான் இன்று என்னையும் என் பெண்ணையும் ஒரு தந்தையே களங்கப்படுத்தி பேசும் சொற்கள் இனிமேல் தாங்க உடம்பில் வலிமை இல்லை..
நாம் இருவரும் அவர் பேச்சை (அது தவறாக இருந்தாலும் ) கேட்டுத்தான் ஆக வேண்டும் என்பது அவரது கொள்கை..
முடியாது.. இனி என்னால் பொறுக்க முடியாது...பொறுத்தது போதும் பொங்கி எழவேண்டும் என்று முடிவுக்கு வந்தாச்சு..இனி நான். எனக்காக வாழப் போகிறேன்.. என் பெண்ணை ஒரு முன்னேற்றும் வழியில் கொண்டு போகிறேன்...என்னுள் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வரப் போறேன்..
இந்த மண்ணில் பெண்மையைப் போற்றும் சில மகான்களும் வாழ்ந்து இருக்கிறார்கள்.
பாரதியின் ரசிகை நான்...அவருடையகவிதையை.
அதுவும்
"அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே.
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சம் என்பதில்லையே.
துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதிலும் அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்பதில்லையே."
இந்த வரிகள் என் மனதைத் தொட்டாலும் நான் பாரதி காட்டிய வழியில் நடந்தேனா..?..
'அம்மாவிற்கு எதிலேயும் அதிகமா ஆசை இல்லை. ஆனாலும் முகத்தை அலம்பி ஒரு பொட்டு பூ பளிச்சென்று ஒரு சாதாரண புடவை கட்டிண்டாக்கூட மஹாலக்ஷ்மி மாதிரி இருப்பா...
ஒரு நாள் கோவிலுக்கு கிளம்பும் போது அந்த மனுஷன்,
"எங்கே சிங்காரிச்சுண்டு கிளம்பி ஆச்சு...? ஆத்துல இருக்கற சாமியை கும்பிட்டா போதாதா?போ.போ...போயி எனக்கு இப்பவே இடியாப்பம் வேணும்..போய் பண்ணு...முதலில் என்னைக் கவனி.". என்றதும் சமையலறைக்கு போய் இடியாப்பம் பண்ண ஆரம்பித்தது நினைவுக்கு வந்தது..
ஜான்சிக்கு வயது ஏற ஏற
அம்மா ...."ஏன்மா அவர் இப்படி இருக்கார்? இத்தனை ஆணாதிக்கமா? .மொதலில் இருந்தே இப்படித்தானா.?என்று கேட்டாள்..
ஒரு சின்னப் புன்னகையுடன் கடந்து செல்லும் துளசியை
"சே... உன்கிட்ட போய் கேட்டேனே.?
ஆனா.இன்னிக்கு விடமாட்டேன் .சொல்லித்தான் ஆகணும்.."
"ஜான்சி...உனக்கு சின்ன வயசு.
இப்போ தான் காலேஜில் சேர்ந்திருக்கே... இதெல்லாம் மண்டையில் போட்டு குழப்பிக்காதே...போ...போ...போய் நன்னா படி.. அதுதான் எனக்கு வேணும்...."..
ஜான்சி மனதில் நினைவலைகள்.
வீசியது..
.
மனதில் வீரம் செறிந்த துளசி கிளம்பியதும் ஒடிவந்து வழியை மறித்தாள் ஜான்சி...
"அம்மா... துளசி இல்லாத பிருந்தாவனம் மணக்குமா?துளசி பவித்ரமான கற்புக்கரசி.. அம்மா.. இத்தனை நாள் நாம ரெண்டு பேரும் அடிமையாக வாழ்ந்தது போதும்..இத்தனை நாள் நானும் ஹாஸ்டலிலும் பாட்டி வீட்டிலும் இருந்ததால் உங்களைப் பத்தி தெரியாதவளாக இருந்திருக்கேன்... வாங்க போகலாம் ..சென்னையில் இரு கரங்களையும் நீட்டி வரவேற்க இன்னும் ஒரு தாத்தா பாட்டி இருக்காங்க..."
"வேண்டாம்.ஜான்சி...இத்தன நாள்அவா இருக்காளா செத்தாளா என்று கூட நினைக்காத நாம இப்போ கஷ்டங்கிற போது அவா கிட்ட போய் நிக்கக் கூடாது...வா..
என்கிட்ட சமையல் திறமை இருக்கு...தையல் திறமை இருக்கு.
அவருக்குத் தெரியாமல் நிறைய பேருக்கு துணிகள் தைச்சு பணம் சேர்த்து வச்சிருக்கேன்...
உன்னை படிக்க வச்சது கூட உங்க அப்பாவை பெத்த பாட்டிதான். உழைப்புதான்... இப்படிப்பட்ட ஒரு மாமியார் வாய்த்தது ஒன்றுதான் இதுவரை நான் செய்த புண்ணியம்... அவரே "இப்படிப்பட்ட ஒரு மகனை பெற்று இருக்கேனே"? என்று பலமுறை வருத்தப்பட்டு இருக்கிறார்..
அவரும் இறந்த பிறகு நீ மட்டுமே என் வழித்துணை...
என்ன பண்றது?மனைவி அமைவது மட்டுமே இறைவன் கொடுத்த வரம் இல்லை.கணவர்
நல்ல நண்பர்கள் குழந்தைகள்
எல்லோரும் அமைவது கூட இறைவன் தந்த வரம்தான்..
உன்னோட படிப்பும் கலைகளும்
என்னோட தையல் கலையும் சமையல கலையும் இருக்கு..
முன்னேறிக் காட்டுவோம்.. எதிர்கால பெண்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை வீரம் இதெல்லாம் சொல்லித் தருவோம்.
திக்கற்ற பெண்களை உயர வைப்போம் "
எல்லா ஆண்களும்
உங்கப்பா மாதிரின்னு சொல்லவே மாட்டேன்.. எத்தனை நல்ல குணமுள்ள ஆண்கள் இருக்கா...நாம வாழ்க்கையில ஜெயிச்சுட்டு கண்டிப்பா என் அப்பா அம்மாவைப் பார்க்க போகலாம். ஏற்கனேவே அவா மனசு வேதனையா இருக்கா...
அவாளைப் பத்தி என் தோழி விமலா அப்பப்போ செய்திகள் அனுப்பறா...."வா.... போகலாம்."
இருவரும் இணைந்து நடந்த காட்சிகள் ஜான்சி மனதில் ரயில் பயணத்தில் ஊஞ்சலாடிக் கொண்டு இருப்பது நிஜம்... ரயிலில் கூ...கூ...ஓசை சாதிக்கச் செல்லும் பெண்களுக்கான மணியோசை ஆக காதில் ஒலித்தது...
அங்கு துளசி வீட்டில் அவர்கள் இருவரையும் காணாமல் காலையில்.
"ஏ....துளசி....எங்க போயிட்டே?
ஏய்... ஜான்சி... ரெண்டு பேரும்
மனுஷனுக்கு ஒரு காபி போட்டுத் தரணும் னு நினைப்பு கூட இல்லாம எங்க போய் தொலைங்சீங்க?
என்று அறை அறையாக தேட,
"மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும் ..
பெண் விடுதலை வேண்டும்.
என்ற ஒருகடிதம் மட்டுமே இருந்தது.. பூஜை அறையில் அவள் பூஜை செய்யும் கடவுள்
விக்ரகங்கள் காணாமல் போயிருந்தது...துளசி ஆசையாக அரவணைக்கும் தொலைபேசியும் இல்லை . தொடர்புக்கு அப்பால் இருந்தது..
தினமும் வணங்கும் துளசிச் செடியும் இல்லை..
திக்கற்ற நிலையில் செய்வதறியாமல்
கீழே உட்கார்ந்தார் ஈஸ்வரன்....
#168
42,830
2,830
: 40,000
58
4.9 (58 )
kumar299123
Nice
mmangorn872
nice
ajaytanti704
Nice
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50